புதன், 27 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எலுமிச்சை பழத்தோல்; எப்படி...?

உடலிலுள்ள கழிவுகளை அகற்ற, கொழுப்பு குறைக்க, எலும்பு உறுதிப்பட எலுமிச்சை தோலில் சக்தி உள்ளது. இதனை சிறு துண்டுகளால் நறுக்கி, வெயிலில் உலர்த்தி பொடி செய்து காற்று போகாத ஏர்டைட் கண்டைனரில் வைத்து கொள்ளலாம். இவை நாட்டு மருந்து  கடைகளிலும் கிடைக்கும்.
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சூடான நீரில் இந்த பொடி 1 ஸ்பூன் போட்டு தேன் கலந்து அருந்தலாம். இதில் பொலிபனொல் பிளவோனோய்ட்ஸ் இருப்பதால் கொழுப்பு குறைக்கும் தன்மை கொண்டது. மேலும் பெக்டின் என்கிற சத்து இருப்பதால் உடல் எடையை மிக  விரைவில் குறைக்கலாம்.
 
சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள், பருக்கள், படை, தோல் சுருங்குதல், கருமையான திட்டுகள் இவை அனைத்திற்கும் எலுமிச்சை தோல் பொடி நிவாரணம் தரும். இந்த பொடியில் நோஸ் வாட்டர், தயிர், ஆரஞ்சு பழச்சாறு சேர்த்து முகத்தில் தடவலாம். இதனால் இளமையான தோற்றம் கொடுக்கும். தோல் சுருக்கத்தில் இருந்து காக்கும் தன்மை கொண்டது.
வாய் துர்நாற்றம், சொத்தை, ரத்தம் கசிதல் போன்றவை இருந்தால், இந்த பொடியினால் பல் துலக்கினால் ஓரளவு விடுபடலாம். எலுமிச்சை தோலிலுள்ள செறிவான கால்சியம், வைட்டமின் C போன்ற சத்துக்கள், எலும்புகளை காக்கும், காவலனாக விளங்குகிறது.
 
எலுமிச்சை தோலில்தான், உடலுக்கு நன்மைகள் தரும் அதிக சத்துக்கள் இருக்கின்றன. எலுமிச்சை பழத்தில் இருக்கும் வைட்டமின் C யைவிட, அதன் தோலில்தான் அதிக வைட்டமின் C இருக்கிறது. 
 
உடலின் மெட்டபாலிசத்தை முறைப்படுத்தி அதிகரிக்கச் செய்து, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்க இந்த எலுமிச்சை  தோல் பயன்படுகிறது.