1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Is this amazing medicinal properties Marutham Pattai...?

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா மருதம் பட்டை...?

மருத்துவ குணங்கள்
மருதம் பட்டை, ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து, அதில் பத்தில் ஒரு பங்கு ஏலம், சுக்கு சேர்த்து, சூரனமாக்கி, காலை மாலை இரு வேலை, காய்ச்சி, காபி, டீ  க்கு பதில் அருந்தி வர, சர்க்கரை நோய் தீரும்.

மருதம் பட்டை, இதன் அளவில் பாதி சீரகம் சோம்பு, மஞ்சள் சேர்த்து பொடியாக்கி, காலை மாலை 6 கிராம் அளவு எடுத்து, 400 மில்லி தண்ணீரில் கலந்து கொதிக்க  வைத்து, தண்ணீர் அளவு 200 மில்லி ஆனதும், பருகி வர, இரத்த அழுத்த நோய், உடலை விட்டு அகலும்.
 
மருதம் பட்டை, வில்வம் துளசி சம அளவில் எடுத்து சூரணம் செய்து, காலை மாலை இரு வேலை சாப்பிட்டு வர, மன உளைச்சல், தானே விலகும்.
 
இதய இரத்த குழாய்களில் உண்டாகும் அடைப்பு, இதய பலவீனம்,இதய வலி போன்ற அனைத்து இதயம் சார்ந்த நோய்களுக்கு மருதம் பட்டை நிரந்தர தீர்வளிக்கும்  மருந்து. 
 
மருதம் பட்டை, வெண் தாமரைப் பூ 100 கிராம், ஏலம், இலவங்கம் மற்றும் திரிகடுகம் 10 கிராம் அளவில் கலந்து, பொடியாகி வைத்துகொண்டு, காலை மற்றும்  மாலை வேளைகளில், 6 கிராம் அளவு பொடியை கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தி வர, இதய நோய், விரைவில் குணமடையும்.
 
வாய் புண், தொண்டை கமறல் போன்றவற்றால் அவதிப்படுவோர் ஒரு ஸ்பூன் மருதம் பட்டை பொடியை இரண்டு கப் நீரில் கலந்து 10 நிமிடம் நன்கு  கொதிக்கவிட்டு, அந்த நீரை வெதுவெதுப்பான சூட்டில் வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை கமறல் நீங்கும். வாய்ப்புண் குணமாகும்.
 
நன்கு உலர்ந்த மருதம்பட்டையை மாவாக அரைத்து, அதை 5 கிராம் அளவு எடுத்து அதில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் சளி, இருமல், ஆஸ்துமா  தொந்தரவுகள் குறையும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!