1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

எல்லா நோய்களுக்கும் மூலகாரணமாக இருப்பது இரத்த அழுத்த அதிகரிப்பா...?

நமது முன்னோர்கள் நோய் நொடியின்றி பல காலம் வாழ்ந்ததற்கு காரணம், சத்தான உணவு முறையையும், கடின உடல் உழைப்பும் தான். ஆனால் மாறி வரும் இந்த கணினி உலகத்தில் நாம் அனைவரும் பதப்படுத்தப்பட்ட, குளிரூட்டப்பட்ட, துரித உணவு வகைகளை பயன்படுத்துகிறோம்.
 

இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகளின் உட்சுவர் குறுகலடைவதற்கு முக்கியக் காரணம் உடலில் உள்ள அதிக அளவுக் கொழுப்பு தமனிகளில்  படிந்து விடுவதே ஆகும். இதனால் இரத்த ஓட்டத்தின் வேகம் தடைபடுகிறது. இதனைத் தடுக்க இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. 
 
சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் இவ்வாறு ஏற்பட்டால் சிறுநீரகத் திசுக்கள் அழிக்கப்படுகின்றன. மூளைக்குச் செல்லும் இரத்த நாளங்களில் கொழுப்புப்  படிந்தால் வாதம் ஏற்படுகிறது. இதுவே இதயத்திற்குச் செல்லும் இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்தால் மாரடைப்பு ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம்தான்  எல்லா நோய்களுக்கும் மூலகாரணமாக உள்ளது.
 
மூளை, இதயத்தைத் தொடர்ந்து சிறுநீரகம் தான். இதற்கும் காரணம் இரத்தக் கொதிப்பு தான். இரத்தக் கொழுப்பு இருப்பது தெரியாமல் விட்டுவிட்டால் அது சிறுநீரகத்தைத் தான் அதிகளவில் பாதிக்கிறது. இதன் மூலம் சிறுநீரகத்தின் செயல்படும் திறன் குறைந்து இறுதியில் சிறுநீரகம் தன் செயல்படும் தன்மையை  இழந்து விடும் நிலை உருவாகும்.
 
இரத்த அழுத்த அதிகரிப்பின் மூலம் ஏற்படும் மற்றுமொரு விளைவு தான் பார்வை இழப்பு ஆகும். நம் விழிக்கோளத்தின் பின்புறம் ஏராளமான இரத்தக் குழாய்கள் உள்ளன. இவை மூளையோடு தொடர்புடையவை ஆகும். இந்த இரத்தக் குழாய்களில் ஏற்படும் அதிக இரத்த அழுத்தத்தினால் இரத்தக் குழாய்களில் ஒருவித  வெடிப்பு ஏற்படுகிறது. இந்த வெடிப்பினால் இரத்தக் குழாய்களில் இரத்தக் கசிவு ஏற்படுகிறது. இதன் மூலம் பார்வை குறைவு மற்றும் குருட்டுத் தன்மை போன்ற  குறைபாடுகள் ஏற்படுகின்றன.