1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Raj Kumar
Last Modified: வியாழன், 23 மே 2024 (17:55 IST)

ஆண்மை குறைபாடு, நீரிழிவு பிரச்சனையை சரி செய்யும் நீர்முள்ளி..! மருத்துவ பயன்கள்..!

Neer Mulli
தமிழர்களின் சித்த மருத்துவ மூலிகைகளில் பல்வேறு உடல் பிரச்சனைகளை சரி செய்யும் ஒரு மூலிகையாக நீர்முள்ளி மூலிகை இருக்கிறது நீரிழிவு பிரச்சனைகளில் துவங்கி மாதவிடாய் பிரச்சனைகள் வரை அனைத்தையும் சரி செய்ய நீர்முள்ளி உதவுகிறது.



நீர்முள்ளியின் பயன்கள்:

நீர்முள்ளியின் விதைகள் சிறுநீரக கல்லை கரைக்கும் திறன் கொண்டவையாக இருக்கின்றன. பாரம்பரியமாக மக்கள் நீர்முள்ளியை பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்கள் நீர்முள்ளி விதைகளை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

மேலும் நீர்முள்ளியில் விதைகளில் உள்ள ஆண்டி இன்பிளமேட்டரி முடக்குவாத பிரச்சனைகளை சரி செய்ய உதவுகின்றன. மேலும் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க இவை உதவுகின்றன.

நீர்முள்ளியின் இலைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். இதற்காக நீர்முள்ளியின் இலைகளை தண்ணீரில் வேகவைத்து அந்த தண்ணீரை அருந்தலாம்.

நீர்முள்ளியின் இலைகள் வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுவதாக கூறப்படுகிறது. நீர்முள்ளியின் வேர் கூட மருத்துவ குணம் கொண்டதாக இருக்கிறது. மாதவிடாய் சுழறி காலக்கட்டங்களில் அதில் ஏதாவது பிரச்சனை ஏற்படும்போது பெண்கள் நீர்முள்ளி வேரை பொடியாக்கி நீரில் கரைத்து அருந்தலாம். அது மாதவிடாய் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது என கூறப்படுகிறது.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் நீர்முள்ளியை பயன்படுத்த கூடாது என கூறப்படுகிறது.