1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Raj Kumar
Last Modified: வெள்ளி, 24 மே 2024 (10:46 IST)

வெயில் காலத்தில் காலை வேளையை சிறப்பாக துவங்க இந்த உணவுகளை எடுத்துக்கலாம்..!

Foods
ஒவ்வொரு தினத்தையும் சிறப்பாக துவங்க காலை வேளையை உற்சாகத்துடன் துவங்க வேண்டியது மிக முக்கியமாகும். ஏனெனில் அதிகாலை வேளையே சோர்வாக துவங்கிவிட்டால் அது நமது ஒட்டு மொத்த தினத்தையும் சோர்வடைய செய்துவிடும்.



அதுவும் இந்த வெயில் காலங்களில் நாம் நீரேற்றமாக இருக்க வேண்டியது முக்கியமாகும். அதிகமாக தண்ணீர் சத்துள்ள ஆரோக்கியமான உணவுகளை காலை உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் நமது தினத்தை சிறப்பாக துவங்க முடியும். எனவே கோடை காலத்தில் காலை வேளையை சிறப்பாக்க உதவும் சில உணவுகளை இப்போது பார்க்கலாம்.

சத்துள்ள பழங்கள்:

Fruits


பழங்களில் வைட்டமின்கள், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் நீர் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இவை உங்களை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன. கோடை காலங்களில் காலை வேளையில் வெள்ளரிக்காய், தர்பூசணி, திராட்சை, ஆரஞ்சு போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

தயிர்:

Curd


செரிமான சக்தியை அதிகரிக்க உதவும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகம் கொண்ட உணவாக தயிர் இருக்கிறது. மேலும் கோடை காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துவதால் காலை உணவில் தயிர் சேர்த்துக்கொள்வது இந்த கோடை காலத்தில் நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும்.

ஓட்ஸ்:

Oats


அதிகமாக நார்ச்சத்து நிறைந்த தானியமாக ஓட்ஸ் உள்ளது. மேலும் இதில் வைட்டமின்கள் தாதுக்கள் அதிகமாக இருப்பதால் அன்றைய நாளுக்கு தேவையான சத்துக்களை பெற ஓட்ஸ் உதவுகிறது. காலை வேளையில் சூடாகவோ அல்லது குளிர்ச்சியாகவோ பாலில் சேர்த்த ஓட்ஸை எடுத்துக்கொள்ளலாம்.

முட்டை:

Egg


புரதத்திற்கான நல்ல மூலமாக முட்டை இருக்கிறது. எல்லா காலக்கட்டங்களிலும் காலை உணவோடு முட்டை எடுத்துக்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். காலையிலேயே முட்டை எடுத்துக்கொள்ளும்போது மதியம் வரைக்கும் அது உங்களை நிறைவாக எண்ண வைக்கும்.

இந்த உணவுகள் எல்லாம் காலை வேளையை ஆரோக்கியமானதாக மாற்றுவதோடு கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றன.