புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா...?

இரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி  அதிகமாகி, உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகிறது.

இரவு உணவுக்குப் பின் சிலர் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த பழக்கம் ஒரு சிலருக்கு ஒரு சில வேளைகளில் நன்மை தந்தாலும்,  பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாகி, உடல் எடை அதிகரிக்க காரணமாக அமைகிறது.
 
இரவு உணவிற்குப் பின் வாழைப்பழம் சாப்பிடுவதால், சாப்பிட்ட உணவு விரைவில் செரிமானம் ஆகும், காலைக்கடன் எந்த சிரமமும் இல்லாமல் கழியும் என்று  கூறுவதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும், வயிற்று உபாதை காரணமாக காலைக்கடன்களை முடிக்க சிரமப்படுபவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம்  சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
 
12 வயது வரை குழந்தைகளுக்கு இரவில் வாழைப்பழம் கொடுக்கலாம். குழந்தைகள் காலை, மாலை என எந்த நேரத்திலும் இதை சாப்பிடலாம். தொடர்ந்து இரவு நேரங்களில் வாழைப்பழம் சாப்பிடுவதால் ஒருசில குழந்தைகளுக்கு சளித்தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
 
வயதானவர்களும் நீரிழிவு நோய் உள்ளவர்களும் இரவு நேரத்தில் வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாது. விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு  செல்பவர்கள் இரவு உணவிற்குப்பின் வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.