செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

ஐஸ் கட்டியை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்ய உதவும் அழகு குறிப்புகள் !!

சருமத்தில் அதிக எண்ணெய் பசையுள்ளவர்கள் ஐஸ் க்யூபை கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வர எண்ணெய் சுரப்பது குறையும். மேலும் சருமத்தில் வேறு எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் நாம் பாதுக்காக்க முடியும்.

முகப்பருவை போக்க ஐஸ் கட்டி, மிகவும் சிறந்தது. இது முகப்பரு ஏற்படுத்தும் வலியையும், முகப்பரு சிவந்து போவதையும், வீக்கமடைவதையும் தடுக்கும். 
 
சிறிதளவு காய்ச்சாத பாலை ஃபிரீஸரில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டு வந்த பிறகு முகத்தைக் கழுவிய பின்னர், இந்த ஐஸ் கட்டியால் முகத்தை ஸ்க்ரப் செய்தால், இறந்த செல்கள் நீங்கி ஃபேஷியல் செய்ததுபோல பளபளப்பாக மாறும்.
 
வெப்பத்தினால் சருமம் கருப்பாகும். சிலருக்கு முகத்தில் அரிப்பு, அலர்ஜி போன்ற பிரச்னைகள் உருவாகும். இதற்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்தால் அரிப்பு  ஏற்படாமல் இருக்கும். மேலும் அலர்ஜி பரவாமல் தடுக்கலாம்.
 
சிலருக்கு முகத்தில், கழுத்துப் பகுதியில், கண்களின் ஓரத்தில், நெற்றியில் என பல இடங்களில் சுருக்கங்கள் இருக்கும். இதனை தடுக்க ஐஸ் க்யூப் கொண்டு மசாஜ் செய்தால் போதும். தினமும் இப்படிச் செய்து வந்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
 
கண்கள் மிகவும் சோர்வாகவோ அல்லது வீங்கியிருந்தால் இரவு நேரத்தில் சிறிதளவு கிரீன் டீயை ஊற்றி, ஃப்ரீஸரில் வைத்து மறுநாள் காலையில் கிரீன் டீயால்  ஆன ஐஸ் கட்டிகளை எடுத்து, கண்களில் ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறைந்து கண்கள் அழகாகப் பிரகாசிக்கும்.