வியாழன், 28 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

எந்த உணவுகளை எடுத்துக்கொள்வதால் இரத்தத்தை சுத்திகரிக்கலாம்....?

இரத்தம் சுத்தமாக தர்ப்பை புல் கஷாயம் செய்து குடித்தால் இரத்தம் சுத்தமாகும். அறுகம்புல் சாறுடன் கீழாநெல்லி சேர்த்து அரைத்து  குடித்தால் இரத்தம் சுத்தமாகும்.
இஞ்சிசாறுடன் தேன் கலந்து சாப்பிட இரத்தம் சுத்தமாகும். காசினி கீரையை பருப்புடன் சேர்த்து சமையல் செய்து சாப்பிட்டு வர இரத்தம்  சுத்தமாகும்.
 
பாலில் பச்சை திராட்சையைப் போட்டு காய்ச்சி கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமடைந்து உடல் நலம் பெறும்.
 
பச்சை காய்கறிகளில் மிகவும் அதிகமான ஊட்டச்சத்துகள் உள்ளன. சிவப்பு இரத்த அணுக்களுக்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிக்க  இந்த காய்கறிகளில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உதவுகின்றன. தீய கூறுகள் உடலில் இருந்து வெளியேற்றப் பட்டதால் இரத்தத்தில்  புதிய அணுக்கள் உற்பத்தியாகிறது.
இரத்தம் தூய்மையாக வெந்தயக் கீரை, வாழைப்பூ, மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகும்.
 
மஞ்சள் கலந்த பாலுடன், சிறிது மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, இஞ்சி போன்றவற்றை சேர்த்து பருகினால் சிவப்பு இரத்த அணுக்களின்  உற்பத்தி அதிகரிக்கும்.
 
புடலங்காயை தினசரி உணவுடன் சேர்த்து வந்தால் இரத்தம் சுத்தமாகும். முருங்கைக் காய் சூப் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம்  சுத்தமாகும்.
 
குங்குமப்பூவை தினசரி தேன் கலந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.