ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட கொள்ளு !!
கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும். மேலும் ஏராளமான மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியது.
கொள்ளு எளிதில் ஜீரணமாகக் கூடிய பயிர். மற்ற தானியங்களை போல் அதிகளவில் பேசப்படுவதில்லை, என்றாலும் கொள்ளில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சி வைத்து சாப்பிடலாம்.
கொள்ளுவை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து அந்த நீரைப் பருகினால், ஜலதோஷம் குணமாகும். கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால், காய்ச்சலை குணமாக்கும்.
கருப்பு கொள்ளை ரசம் வைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உள்ள உப்புக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும். அதேபோல் சிறுநீரக கற்களை வெளியேற்ற கூடியது. சிறுநீரக கற்களை வெளியேற்றுவதால் அடிவயிற்று வலி இருக்காது.
இரவில் ஒரு கைப்பிடி கொள்ளுவை எடுத்து தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் குடித்து வந்தால் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்கும்.