திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (14:37 IST)

வில்வ இலை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா...?

வில்வ இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி டீநீராக்கி சர்க்கரை அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடிக்க குடல் புண் குணமாகும்.


வில்வ இலைச்சாறு ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சர்க்கரை சேர்த்து கொடுக்க மலச்சிக்கல் மறைந்து போகும்.

வில்வ இலைக் குடிநீர் தீராத வயிற்றுப் போக்கு, காசம், ரத்தக் கடுப்பு முதலியவற்றை குணப்படுத்தும். மேலும் வியர்வையை உண்டாக்கும். காய்ச்சலைத் தணிக்கும். பேதியை நிறுத்தவல்லது.

வில்வத்தின் வேரை உலர்த்திப் பொடியாக்கி வைத்துக் கொண்டு வேண்டும்போது சிறிது நீர்விட்டு குழைத்து நெற்றிக்கு பற்றாகப் போட தலைவலி தணிந்துவிடும்.

வில்வ இலையை விழுதாக அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு உள்ளுக்கு சாப்பிட்டு விட்டு குளிர்ந்த நீரில் தலைக்கு குளித்துவர பெரும்பாடு என்னும் அதி ரத்தப் போக்கு குணமாகும்.

வில்வ இலை தளிரை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளஞ்சூட்டுடன் ஒத்தடம் கொடுப்பதால் கண் சிவந்து காணுதல், கண்களில் அரிப்பு ஏற்படுதல், கண்வலி ஆகியன குணமாகும்.