வியாழன், 21 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 14 நவம்பர் 2024 (18:31 IST)

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

sugar
உலகம் முழுவதும் இன்று உலக நீரிழிவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், சர்க்கரையை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 
 
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்காவிட்டால், தலை முதல் கால் வரை அனைத்து உறுப்புகளும் பாதிப்புக்கு உள்ளாகும் என்றும், குறிப்பாக கண் பார்வை மற்றும் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.
 
உடல் எடை அதிகரிப்பது, உணவு கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது, இனிப்பு பானங்களை அடிக்கடி சாப்பிடுவது, எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுவது ஆகியவை சர்க்கரை நோயை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களாகும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் மது மற்றும் புகையை கண்டிப்பாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி, சத்தான உணவுகள், மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, தன்னம்பிக்கை, நல்ல தூக்கம், மற்றும் மன உறுதி ஆகியவற்றால் நீரிழிவு நோயை கட்டுக்குள் கொண்டு வரலாம். மருத்துவர்கள் ஆலோசனைப்படி மாத்திரைகளை எடுத்துக் கொள்வது அல்லது தேவைப்பட்டால் இன்சுலின் எடுத்துக் கொள்வதும் அவசியமாகும்.
 
நீரிழிவு நோயின் மிகப்பெரிய எதிரி மன வருத்தம் என்பதால், மனவருத்தம் இல்லாமல் மனதை எப்போதும் ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.
 
 
Edited by Mahendran