1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (11:27 IST)

மூச்சு குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாகும் முசுமுசுக்கை !!

முசுமுசுக்கை கீரையில் நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. இது நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடியது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் பல நோய்களை குணப்படுத்தக் கூடியது.


முசுமுசுக்கை கீரையில் புரோட்டின், நார்சத்து, இரும்பு சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் ‘C’ ஆகியவை நிறைந்து காணப்படுகிறது.

முசுமுசுக்கை கீரையை உணவில் சேர்த்து கொண்டால் சளி, கோழை, தும்மல், குறட்டை ஆகிய பிரச்சினைகள் சரியாகும். முசுமுசுக்கையானது மூச்சுக் குழாயில் ஏற்படும் நோய் தொற்றுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக முசுமுசுக்கை இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழ்கினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

முசுமுசுக்கை இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெய்யில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வர வேண்டும். இப்படி செய்தால் இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும். இரத்தமும் சுத்தமடையும்.

முசுமுசுக்கை தைலம் உடல் சூட்டை தணிக்கும். கண் எரிச்சல் போக்கும். முசுமுசுக்கை இலையை அரைத்து வெங்காயத்துடன் சேர்த்து நெய்யில் வதக்கி, சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோய் குணமாகும்.