ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

உடல்நலத்தை பராமரிக்க பயன்படும் செம்பருத்தி பூ...!!

செம்பருத்தி பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் சிறுநீரகம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
செம்பருத்தி பூவை தேனில் ஊறப்போட்டு அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குறையும், இரத்தம் சுத்தமாகும்.
 
மாதவிலக்கு சீராகவும் வயிற்று வலி குறையவும் தொடர்ந்து வெறும் வயிற்றில் செம்பருத்திப்பூவை அல்லது பூவின் மொட்டை உண்டு  வரவேண்டும்.
 
செம்பருத்திப் பூ இலைகளை கொதிக்க வைத்து தண்ணீரை அருந்தினால் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு ரத்தத்திலுள்ள கொழுப்புகள்  குறையும்.
 
தேங்காய் எண்ணெயில் செம்பருத்திப் பூவை அரைத்து சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஒருநாள் அப்படியே விட்டு வடிகட்டி  பயன்படுத்துவதால் தலைமுடி கொட்டுவது குறையும் உடல் சூடு தணியும். இளநரை குணமாகும்.
 
குழந்தைகள் செம்பருத்தி பூவை உட்கொண்டு வந்தால் ஞாபகசக்தி, நினைவாற்றல் அதிகரிக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கும்போது மகரந்த  காம்பை எடுத்துவிடவேண்டும்.
 
செம்பருத்திப்பூவை காயவைத்து பொடியாகவும் பயன்படுத்தலாம். அல்லது தேனில் செம்பருத்திப் பூவை ஊறப்போட்டு பயன்படுத்தி வரலாம்.