1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் நிறைந்துள்ள அன்னாச்சிப்பழம்...!!

அன்னாசிப்பழம் உடலுக்கு தேவையான பல சத்துக்களை கொண்டுள்ளது. இதில் அதிகமான நீர்ச்சத்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் புரதச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் எ,பி,சி, இதுபோன்ற பலசத்துக்கள் உள்ளது.
அண்ணச்சிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உள்ளன. விட்டமின் A,B,C சத்துகள் நிறைந்துள்ளன. இந்த பழத்தை  சாப்பிடுவதால் ரத்தம் சுத்தமாகிறது. மேலும் ரத்தத்தை ஊற வைக்கிறது. அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் உடல் பளபளப்பாகும் .   அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் உடலின் அதிகப்படியான கொழுப்புச்சத்தை குறைக்கிறது.
 
அன்னாசிப்பழத்தில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு நோய்எதிப்பு சக்தியை அதிகரிக்கசெய்கிறது. மேலும் செரிமான பிரச்சனைகளையும்  குணப்படுத்துகிறது. இந்த அன்னாசிப்பழத்தை கர்ப்பிணிப்பெண்கள் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் இது உடலின் வெப்பநிலையை அதிகரித்து  கருக்கலைப்பை ஏற்படுத்தும்.
 
அன்னாச்சிப்பழச் சாறுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, வாய்ப்புண், முளைக்கோளாறு  ஞாபகசத்தி குறைவு போன்ற நோய்கள் குணமடையும்.
 
அன்னாச்சிப்பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாச்சிப் பழச்சாற்றை சாப்பிட்டால்  நல்ல முன்னேற்றம் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாச்சிப் பழத்தை சாப்பிட்டால் பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து  தப்பிக்கலாம்.
 
அன்னாசிபலத்தில் உள்ள சத்துப்பொருட்கள் உடலின் அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை  தடைசெய்கிறது. மேலும் தொப்பையை குறைக்க பயன்படுகிறது. இந்த அன்னாசிப்பழம் மஞ்சள்காமாலை குணப்படுத்தும் தன்மையை  கொண்டுள்ளது.