செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. சைவம்
Written By Sasikala

ஆரோக்கியம் தரும் சுக்கு மல்லி காபி செய்ய...!!

தேவையான பொருட்கள்:
 
சுக்கு - 1 துண்டு
தனியா (மல்லி விதை) - 1 ஸ்பூன்
காப்பி தூள் - 2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் - 1 டம்ளர்
பொடித்த வெல்லம் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
 
ஒரு கடாயை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தனியாவை வறுத்துக் கொள்ளவும் மிக்ஸியில் நைஸாக பொடி செய்து கொள்ளவும். சுக்கையும்  தூளாக்கி கொள்ளவும்.
 
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பொடித்த வெல்லத்தை சேர்த்து கரையும் வரை கிளறிக் கொள்ளவும் வெல்லம் கரைந்தவுடன் அதில்  அரைத்து வைத்திருக்கும் தனியா (மல்லி) பவுடர் காபி தூள் சேர்த்து கொதிக்க விடவும். வடிகட்டி குடிக்கலாம். குழந்தைகளுக்கு ரொம்பவே  ஆரோக்கியமானது.
 
குறிப்பு: வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டியையும் பயன்படுத்தலாம். 
 
பயன்கள்: 
 
* மல்லி விதை வயிற்று வாயுவை அகற்றி வாயுத் தொந்தரவு, உணவு எதுக்களித்தல், செரிமானம் இல்லாமை போன்றவற்றை சரி செய்கிறது. உடலில் கொழுப்பு சேருவதையும் தடுக்கிறது.
 
* மிளகு அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், அமிலச்சுரப்பு போன்றவற்றை தடுக்கிறது. உடலில் கொழுப்பு சேருவதையும் தடுக்கிறது.
 
* ஜீரணம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்களும், உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சாப்பாட்டிற்கு பிறகு சுக்கு மல்லி காபி குடிக்கும் பழக்கத்தை மேற்கொண்டால் விரைவில் சரி செய்ய முடியும்.