Daily Horoscope

மூலிகைகளை பயன்படுத்தி குடிநீர் தயாரிப்பு முறைகளும் அதன் பயன்களும்...!!

Written By Sasikala
Updated: செவ்வாய், 10 நவம்பர் 2020 (10:14 IST)

ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து வடிகட்டி அப்படியே குடித்துவந்தால், உடல் சோர்வு அதிக தாகம் அடங்கும்.
 
ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் பால் காயத்தை (பெருங்காயம்) தட்டிப்போட்டு சூடாக்காமல் 2 மணி அப்படியே ஊறவைத்து பிறகு குடித்து வந்தால் வாய்வுப்பிடிப்பு ஏப்பம், மூட்டுவலி குணப்படும்.
 
ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிதளவு சுக்கு, மிளகு, கொத்தமல்லியை தட்டிப்போட்டு சிறிது சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வந்தால் அதிக சோர்வு  சளித்தொல்லை, முகத்தில் ஏற்படும் கருவளையம் தொண்டைக்கட்டு குணமாகும்.
 
ஒரு லிட்டர் தண்ணீரில் சீரகம் போட்டு சிறிதளவு சூடாக்கி குடித்து வந்தால் அஜீரணக்கோளாறு வயிற்று உப்புசம் உடல் சூடு தணியும்.
 
ஒரு லிட்டர் தண்ணீரில் அரை தேக்கரண்டி ஓமம் போட்டு சிறிது சூடாக்கி வடிக்கட்டி குடித்து வந்தால் குடலிறைச்சல், வயிற்றுப்பூச்சி அடிக்கடி வாய்வு பிரிதல், வயிற்றுவலி குணமாகும்.
 
ஒரு லிட்டர் தண்ணீரில் கையளவு ஆவாரம் பூவை போட்டு சூடாக்கி வடிகட்டி குடித்து வந்தால் கை, கால் பாதங்களில் சேற்றுப்புண், நகச்சொத்தை உடல் அரிப்பு போன்றவை குணமாகும்.

எல்லாம் காட்டு

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

இரவில் நன்றாக செரிமானமாக இதை ஃபாலோ பண்ணுங்க!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

அடுத்த கட்டுரையில்