1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

இத்தனை அற்புத மருத்துவ நன்மைகளை அள்ளி தரும் தும்பை !!

தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, பொறுக்கும் சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

காய்ச்சலுக்கும் தும்பைப்பூ நல்ல மருந்தாகிறது. தும்பைப்பூவுடன் சம அளவு மிளகு சேர்த்து மையாக அரைத்து சிறுசிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள். நிலவேம்பு கஷாயத்தில் இந்த உருண்டையில் ஒன்றை எடுத்து கலந்து உள்ளுக்கு சாப்பிட்டால், காய்ச்சல் உடனே நிற்கும்.
 
தும்பைப்பூவின் சாறு 2 சொட்டு, வேலிப்பருத்தி (உத்தாமணி) சாறு 2 சொட்டு, மிளகுத்தூள் 2 சிட்டிகை, தேன் சேர்த்து குழைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள், மாந்தம், பேதி எல்லாம் சரியாகும்.
 
விஷப்பூச்சிகள் கடித்தால் தும்பைப்பூவையும், அதேஅளவு தும்பை இலையையும் எடுத்து நசுக்கிச்சாறு எடுத்து, அதில் கால் அவுன்ஸ் அளவு சாப்பிட வேண்டும். இதேபோல, பூ மற்றும் இலையை அரைத்து பூச்சிக் கடித்த இடத்தில் பற்று போட்டால் உடனே விஷம் முறிந்துவிடும். 
 
சொறி, சிரங்கு உள்ளவர்கள் தும்பைப்பூவையும், தும்பை இலையையும் மையாக அரைத்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் கழித்து சுட்ட சீகைக்காயுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்துக் குளித்து வந்தால் பிரச்னை தீரும்.
 
பாம்பு கடித்து விஷம் தலைக்கு ஏறி மயக்கம் வந்துவிட்டால், முதலுதவியாக தும்பை இலைச்சாறை மூக்கில்விட்டு ஊதினால் சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்துவிடும். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்கலாம்.