புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:38 IST)

உடல் எடையை குறைக்க உதவும் ஆரோக்கிய குறிப்புகள் !!

எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க பெரும்பாடுப்படுகின்றனர். தேவையற்ற வயிற்று தசையை குறைக்க கீழ்காணும் இந்த இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் எளிதில் குறைக்கலாம்.


சரியான முறையில் சாப்பிட்டால் 80% தேவையற்ற கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். நொறுக்கு தீனிகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும் உணவுகளை அறவே தவிர்த்தால் உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கலாம். இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்கள், வேகவைத்த உணவு வகைகளை தேர்ந்தெடுத்து உண்ணலாம்.

தாகம், பசி போன்றவை ஏற்படும்போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை சாப்பிட்டு உண்டு தங்களின் உடல் எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர்.

எப்போதும் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒருநாளைக்கு குறைந்தது 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

தினமும் தவறாது உடற்பயிற்சி மேற்கொள்ளல் வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் உடற்பயிற்சிகென்று ஒதுக்க வேண்டும். கடினமான உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் குறைந்தது காலை மற்றும் மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.