வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (16:14 IST)

முளைக்கட்டிய தானியங்களில் ஒளிந்துள்ள நன்மைகள் என்ன...?

ஒரு நாளைக்கு ஏதாவது ஒரு வேளை முளைகட்டிய தானியங்களை எடுத்துக் கொள்ளலாம். பாதி உணவும், பாதி முளைகட்டிய தானியங்களும் இருக்குமாறு சாப்பிட்டால் நல்லது.


முளைகட்டிய தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது காலை உணவுடன் சேர்த்தே சாப்பிட வேண்டும். தானியங்கள் மட்டும் சாப்பிடுவதாக இருந்தால் முளைகட்டிய தானியங்களை வேகவைத்து சாப்பிடலாம் .

சில சமயங்களில் முளைகட்டிய தானியங்கள் செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்பதால் 5 வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளுக்கு வேகவைக்காமல் கொடுப்பதை தவிர்த்திடுங்கள்.

முளைகட்ட வைக்க சுத்தமான நீரை பயன்படுத்துங்கள். கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் முளைகட்டிய தானியங்கள் வாங்குவதை தவிர்த்திடுங்கள். அதே போல தினமும் ஒரு வகையான தானியங்களை எடுப்பதற்கு பதிலாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான தானியங்களை எடுக்கலாம்.

முளைக்கட்டுவதனால் உயிர்ச்சத்து கிடைக்கின்றது. 100 கிராம் பயிரில் 7 முதல் 20 மி.கி உயிர்ச்சத்து கிடைக்கிறது.  ரைபோஃபிளேவின், நயாசின், கோலின் மற்றும் பையோட்டின் அளவுகள் அதிகரிக்கப்படுகிறது.

மாவுச்சத்தானது சர்க்கரைப் பொருட்களாக மாற்றப்படுகிறது. முளைக்க வைக்கப்பட்ட பயறுகளை, சாலட் மற்றும் பச்சடி போன்ற உணவு வகைகளில் சேர்க்கலாம். முளை கட்டப்பட்ட பயறுகளை சமைக்காமல் உண்ணலாம். ஏனெனில், முளை கட்டுதலினால் பயற்றின் சுவை மற்றும் தன்மை கூட்டப்படுகிறது.