வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (17:19 IST)

தினமும் நடைப்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்ன...?

தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்பவருக்கு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இதயம் மிகவும் திறமையாக செயல்பட வைக்கிறது.


நடைப்பயிற்சி மேற்கொள்பவருக்கு இரத்தத்தில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். மாரடைப்புக்கான வாய்ப்புக்களை குறைக்கும்.

நடைப்பயிற்சி, நம் உள் உறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அளித்து உடல் உறுப்புகளை சீராக செயல்பட உதவுகிறது.

நடைபயிற்சி மேற்கொள்வதால், இடுப்பளவு மற்றும் வயிற்று பகுதியில் உள்ள அதிகப்படியான சதைப் பகுதியை குறைக்க உதவுகிறது.

தினமும் நடைபயிற்சி செய்வதின் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

நடைப்பயிற்சி இரத்த அழுத்தத்தைத் குறைப்பதோடு, இரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோபின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்

தொடர்ச்சியான நடைபயிற்சி, எலும்புகளையும், தசைகளையும் வலிமையாக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் அடிக்கடி அவஸ்தைப்படுவதில் இருந்து விடுபடலாம்.