செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருத்துவ குணம் நிறைந்த அவுரியின் பயன்கள்...!!

அவுரி இலைகள் சாயம் தருவது மட்டுமின்றி மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது. மலக்சிக்கலை நீக்கும் இயற்கையாக கிடைக்கும். மிகச் சிறந்த மலமிளக்கியாகும்.
அவுரி வேர் பட்டையை கைபிடியளவு எடுத்து பத்து மிளகு சேர்த்து நான்கு டம்ளர் நீரில் ஒரு டம்ளராக காய்ச்சி தினம் இரு வேளை பருகி  வர, ஒவ்வாமை, தோல் நோய்கள் ஆகியவை தீரும்.
 
அவுரி இலையை அரைத்து தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும். இதன் இலையை அரைத்து விளக்கெண்ணெய்யுடன் கலந்து சிறு குழந்தைகளின் தொப்பிளை சுற்றி தடவ மலம் வெளியாகும்.
 
அவுரி வேரை நன்றாக அரைத்து நெல்லிக்காய் அளவு அரை ஆழாக்கு பசுவின் பாலில் கலக்கி வடிகட்டி தினம் ஒரு வேளை என எட்டு நாள் தர சிலந்தி, எலி முதலியவற்றின் விஷம் நீங்கும்.
 
முடி வளர்க்கும் தைலங்களில் கரிசாலை நெல்லிக்காய் இவைகளுடன் அவுரியும் சேர்க்கப்படுகிறது. கேசத்தின் நிறத்தை மாற்றும் சக்தி உள்ள மூலிகை ஆயிர்வேதத்தில் இதனை நீலி எனப்படுகிறது.
 
இந்த அவுரி சமூல சாறு நல்ல பாம்பு விஷத்திற்கு எதிர் மருந்தாக செயல்படும். தீப்புண் தீயினால் ஏற்பட்ட கொப்புளங்களைச் சரியாக்க இந்த  அவுரி பயன்படும்.