1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

பலவித நோய்களுக்கு தீர்வு தரும் குப்பைமேனி இலை

குப்பைமேனி இலையின் சாறு எடுத்து இலேசாக சூடாக்கி 15 மி.லி. கிராம் அளவு அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள்  வெளியேறும்.

 
குப்பைமேனி இலையுடன் சிறிது உப்பு சேர்த்து அரைத்து உடலெங்கும் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் சொறி,  சிரங்கு மாறி சருமம் பொலிவுபெறும்.
 
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து புண், நச்சுக்கடி இவைகளுக்கு பற்று போடலாம். தீப்பட்ட புண்களுக்கு  பூசினால் புண் விரைவில் குணமாகும்.
 
பத்து கிராம் குப்பைமேனி வேரை மென்மையாக அரைத்து நீரில் கரைத்து கஷாயம் செய்து குடித்து வந்தால் உடலில் உள்ள  தேவையற்ற விஷநீர் வெளியேறும்.
 
குப்பைமேனி இலையை உணவு முறையாகச் சாப்பிட்டு வந்தால் திமிர்வாதமான நரம்பு பலவீனம், உடல் வலி, கால் வலி,  மந்தத்தன்மை போன்றவை நீங்கும்.
 
முகத்தில் பெண்கள் சிலருக்கு பூனை மீசை தாடி போன்றவை வளர்ந்து முக அழகை கெடுக்கும்,. அவர்கள் குப்பை மேனியை கஸ்தூரி மஞ்சளுடன் அரைத்து முகத்தில் தடவி வந்தால் நாளைடவில் முடி உதிர்ந்துவிடும்.