Daily Horoscope
✕

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மஞ்சள்...!!

Written By Sasikala
Updated: வெள்ளி, 1 நவம்பர் 2019 (13:02 IST)
 
பாலில் சிறிது மஞ்சள் தூளை கலந்து அதனைக் கொண்டு முகத்தை துடைத்தால் சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவோடு காணப்படும். அதுமட்டுமின்றி இதனை வெடிப்புள்ள உதட்டில் தடவி வந்தால் வெடிப்புகள் நீங்கிவிடும்.
 
எலுமிச்சை சாற்றில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து சருமத்தில் தடவி வந்தால் வெயிலால் மாறியிருந்த சருமத்தின் நிறம் மீண்டும் பழைய  நிறத்திற்கு திரும்புவதோடு சருமமும் பொலிவோடு மென்மையாக இருக்கும்.
 
சருமத்தில் உள்ள காயங்களை போக்கி, அழகான சருமத்தை பெருவதற்கு, மஞ்சள் தூளுடன் தேன் கலந்து தடவி ஊறவைத்து கழுவவேண்டும்.
 
தயிருடன் மஞ்சள் தூளை சேர்த்து, முகத்திற்கு தடவி மசாஜ் செய்து வந்தால், சருமம் குளிர்ச்சியுடன் இருப்பதோடு பொலிவோடும் இருக்கும்.
 
தினமும் மஞ்சளை நீரில் கலந்து, முகத்திற்கு நன்கு பூசி சிறிது கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் முளைக்கின்ற தேவை முடிகள் உதிரும். எதிர்காலத்தில் முகத்தில் தேவையற்ற முடிகள் முளைக்காமல் தடுக்கவும் செய்கிறது.
 
ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு. உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments