வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (17:44 IST)

இத்தனை அற்புத சத்துக்களை கொண்டுள்ளதா ஓட்ஸ் !!

ஓட்ஸில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், விட்டமின் பி6, பி1, பி2, இரும்பு, புரதம், நார் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.

ஓட்ஸில் அதிக அளவு நார்சத்து நிரம்பியுள்ளது. இந்த நார்சத்து உணவை சுலபமாக செரிமானம் செய்ய உதவுவதோடு, குடலில் புண்கள் மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது. 
 
வாரத்திற்கு ஒரு முறையாவது ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை செய்து சாப்பிட்டு வருவது வயிற்றில் இருக்கும் நச்சுகள் வெளியேற செய்யும்.
 
ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோயானது கட்டுப்படுத்தப்படுகிறது. ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், உணவுகளை உடல் மெதுவாக செரிக்க செய்யும். இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு திடீரென உயராது.
 
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் ஓட்ஸ் கொண்டு செய்யபட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவது உடலுக்கு நல்லது.
 
மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு மற்றும் வயிற்றுவலி காரணமாக பெண்கள் சிலர் உடல்ரீதியாக பலமிழந்து காணப்படுவார்கள். இவர்கள் ஓட்ஸ் மூலம் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வர அவர்களின்  உடல்சோர்வு நீங்கும்.
 
ஓட்ஸ் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். தினந்தோறும் காலை உணவாக ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும். ஓட்ஸ் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்பை உடலில் சேர விடாமல் தடுக்கிறது.