1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Benefits of adding more Kothavarangai to the diet !!

உணவில் அதிகம் கொத்தவரங்காய் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!

கொத்தவரங்காய்
கொத்தவரங்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்தால் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். கொத்தவரங்காய் காயவைத்து வற்றலாகவும் பயன்படுகிறது.

கொத்தவரங்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளது. எனவே தினமும் உணவில் கொத்தவரங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். 
 
கொத்தவரங்காயில் உள்ள கால்சியமானது எலும்புகளை பலப்படுத்தி எலும்புகள் தேய்மானம் அடைவதை தடுக்கிறது. கொத்தவரங்காயில் காணப்படும் நார்ச்சத்தானது இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவினைக் குறைக்கிறது.
 
உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் தடுக்கப்படுகின்றன. கொத்தவரங்காயில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியினை அதிகரிக்கிறது.
 
கொத்தவரங்காயில் உள்ள இரும்புச்சத்து மற்றும் கால்சியம் கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இதில் உள்ள ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகள் இல்லாமல் வளர உதவுகிறது.
 
இரைப்பை மற்றும் குடல்களை சீராக இயங்க வைத்து செரிமானத்திற்கு வழிவகை செய்கிறது. சருமப் பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக கொத்தவரங்காய் பயன்படுகின்றது.
 
கொத்தவரங்காயை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைவதற்கு பயன்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
எளிதில் கிடைக்கும் இந்த காயில் இத்தனை மருத்துவ குணங்களா...!!