வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 7 அக்டோபர் 2022 (15:20 IST)

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறதா கிரீன் டீ !!

Green Tea
பெரும்பாலான மக்களால் விரும்பி சாப்பிடப்படும் தேநீராக கிரீன் டீ மாறியுள்ளது. பலரும் பால், காபி, டீ குடிப்பதை தவிர்த்து கிரீன் டீ யை விரும்பி குடிக்கின்றனர்.


கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. மூச்சு சம்மந்தமான  பிரச்சனைகளும் கிரீன் டீயால் சரியாகின்றன.

கிரீன் டீயைத் தினமும் இரு வேளைகள் பருகிவருவதால் பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும். உடல் எடையைக் குறைப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.

மெட்டபாலிசத்தை அதிகரிப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும். வயதான தோற்றத்தை குறைத்து, இதய நோய்கள் வராமல் தடுக்கக்கூடியது. கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். பெருங்குடல் பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும்.

கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின் உற்பத்தியைத் தூண்டி சருமத்தை பாதுகாக்கிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும்.

கிரீன் டீயில் தயமின் எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளதால் தொடர்ந்து  கிரீன் டீ அருந்தும்போது  இதய ரத்தக் குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும்.

Edited by Sasikala