ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ள வெந்தயக்கீரை !!
வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. சொறி, சிரங்கு வராமல் தடுக்கிறது. வெந்தயக் கீரையை தேனுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
வெந்தயக் கீரையை அரைத்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண், வாய்ப்புண் ஆறும். மூல நோய், குடல் புண் போன்ற நோய்களுக்கு வெந்தய இந்தக் கீரை மிக சிறந்த மருந்தாகும். மேலும் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
வெந்தயக் கீரை ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும். வெந்தயக் கீரையை உண்டு வந்தால் சிறுநீர் சம்பந்தப்ட்ட கோளாறுகள் தீரும். நரம்புகளை பலப்படுத்தும். வயிற்றுக்கு கட்டி, உடல் வீக்கம், சீத பேதி, குத்திருமல், வயிற்று வலி போன்ற அனைத்தும் குணமாகும்.
வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும். இந்தக் கீரை வயிறு பிரச்சனைகளையும் குணப்படுத்துகின்றது.
வெந்தயக் கீரை ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. மேலும் சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வை கோளாறுகளைச் சரி செய்கிறது. மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை வெந்தயக்கீரை குணப்படுத்துகிறது.
Edited by Sasikala