Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத்தி பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தசோகை தீருமா...?

Written By Sasikala
Updated: வியாழன், 26 நவம்பர் 2020 (10:52 IST)
 


அத்தி பழங்களை சாப்பிட்டால் வயிறு நிறைந்த உணர்வு நெடுநேரம் இருக்கும். அத்திப்பழங்களைப் பச்சையாகவோ அல்லது உலர வைத்தோ சாப்பிடுவதால் பல  நல்ல பயன்கள் கிட்டும்.
 
சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தின் சர்க்கரை அளவை சரியான முறையில் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.
 
அத்தி பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள கழிவுகளை அகற்றப் பெரிதும் உதவுகின்றன. குறிப்பாக மெனபோஸ் காலத்தில் பெண்களுக்கு அதிகமாக முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும். அந்த சமயங்களில் அத்தி பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் முடி கொட்டுதலைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
 
அத்தி பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலில் இரத்த உற்பத்தி மேம்படும். ஆக இதன் மூலம் இரத்தசோகை போன்ற வியாதிகள் விரட்டி அடிக்கப்படும்.
 
இரத்த ஓட்டம் சீராக நடைபெற அத்தி பழம் உதவும். அந்த வகையில் இதய வியாதி உள்ளவர்களுக்கு அத்தி பழம் பல நன்மைகளைப் பயக்கும்.
 
அத்தி பழத்தில் நிறைந்துள்ள விட்டமின் சி மற்றும் விட்டமின் ஏ சத்து முடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமானது. மேலும் இதில் உள்ள மெக்னீசியம் சத்து தலைமுடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும். 

எல்லாம் காட்டு

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

தயிருடன் எதை கலந்து சாப்பிட்டால் என்ன நன்மை?.. வாங்க பார்ப்போம்!...

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

அடுத்த கட்டுரையில்
Show comments