செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (14:32 IST)

கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது ஏன் தெரியுமா...?

நீரிழிவு நோயாளிகள், உணவில் கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சேர்த்து வருவது நல்லது. இவை இன்சுலின் சுரப்பை சீராக வைப்பதற்கு உதவுகிறது.


கோதுமையில் வைட்டமின் ஈ, செலினியம் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன, இவை புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. எனவே கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வருவது நல்லது.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், கோதுமையால் செய்யப்பட்ட சப்பாத்தியை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள நார்ச்சத்து வயிற்றில் செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவுகிறத

கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் என்று பலருக்கும் தெரியும். எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் மைதாவை தவிர்த்து, கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது.

இதய நோய் உள்ளவர்கள், கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால், இதயம் வலிமையாக இருக்கும். கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம் ஏற்படாதவாறு பாதுகாக்கும்.

கோதுமையில் நார்ச்சத்து உள்ளது. கோதுமையால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் எளிதில் செரிமானமாகும். இதனால் செரிமான பிரச்சனை ஏற்படாது.