1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (17:27 IST)

முள் சீத்தாபழத்தை சாப்பிடுவதால் என்னவெல்லாம் நன்மைகள் உள்ளது தெரியுமா...?

Mul seeta pazaham
முள் சீத்தாபழம் நம் நாட்டில் "முள் ஆத்தன்காய்" என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும்.


அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. நீர் சத்து, புரதம், தாது உப்புகள், நார்சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் போன்ற சத்துகள் உள்ளன. இரும்பு சத்து போன்றவை உள்ளன.

குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். பெண்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைக்கும் முள் சீத்தாபழம் நல்லது. கல்லீரல், மண்ணீரல், நுரையீரலில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கிறது. ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வயிற்றுப் போக்கு, குடல் புண், ஈரல் பாதிப்பு போன்றவற்றுக்கும் முள் சீத்தாபழம் சிறந்தது.

சீத்தாபழத்தைப் பழத்தைப் போலவே அதன் இலைகளும் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளை கஷாயமாக தயாரித்து குடிக்கலாம். தேநீராகவும் பயன்படுத்தலாம். இலையின் சாறானது மன அழுத்தத்தைக் குறைக்கும். தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை சரி செய்யும். வாதம், கீழ்வாத த்துக்கு மருந்தாகவும் இலைகள் பயன்படுகின்றன.

முள் சீத்தாபழம் புற்றுநோய்க்கு மருந்தாகப் பயன்படும் என்று ஒரு தரப்பினர் சொல்கின்றனர். முள் சீத்தாபழம் புற்றுநோய் செல்களைத் தடுக்கும் கொல்லியாக பயன்படுகிறது என்று சொல்லப்படுகிறது. இந்தப் பழம், புற்றுநோய்க்கு கொடுக்கப்படும் ரசாயன மருந்துகளைவிட பல மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய்க் கொல்லியாக உள்ளதாக  ஆய்வக  ஆராய்ச்சியில் கூறுகின்றனர்.