சப்ஜா விதைகளை எப்படி எடுத்து கொள்ளவேண்டும் தெரியுமா...?

Written By Sasikala
Updated: புதன், 2 டிசம்பர் 2020 (09:38 IST)

சளி, காய்ச்சல், குடல் புழுக்கள், வயிற்றுக் கோளாறுகள், கீல்வாதம் போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலைச்சாறு, மூக்கடைப்பை நீக்கும்; தோல் வியாதிகளைப் போக்கும், குடல் புழுக்களை வெளியாக்கும்.
 
சிறுநீர் பாதையில் ஏற்படும் புண், நீர் எரிச்சல் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலுக்கும் இது நல்ல மருந்து. இது உடல் சூட்டை குறைத்து, உடலை சீரான  சீதோஷ்ண நிலைக்கு கொண்டுவரும் இயல்பு கொண்டது. அதனால் இதை கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும்  பயன்படுத்தலாம்.
 
கோடை காலத்தில் வட மாநிலங்களில் பலூடர் என்ற குளிர்பானத்தில் கலந்து இந்த விதையை பயன்படுத்துவதால் இதற்கு ‘பலூடா விதை’ என்ற பெயரும் உண்டு. கோடை காலத்தில் நன்னாரி சர்பத்தில் இதை கலந்து சாப்பிடுவது நல்லது. இந்த சப்ஜா விதை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
 
சப்ஜா விதையில் நார்சத்து அதிகமாக இருப்பதினால் உங்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறது. அது மட்டுமல்லாமல் செரிமான பிரச்சனை, நெஞ்செரிச்சல், குடலில் புண் போன்ற அனைத்திற்கும் தீர்வாக சப்ஜா விதைகள் இருக்கிறது.
 
முகப்பருக்கள் மறைய திருநீற்றுப்பச்சிலை சாற்றுடன் வசம்பைச் சேர்த்து அரைத்து, பசைபோல செய்து, நன்றாகக் குழைத்து, பருக்கள் உள்ள இடத்தில் தடவ  வேண்டும்.
 
இருமல் கட்டுப்பட இலைச்சாறு, தேன் ஆகியவற்றை சமமாகக் கலந்து, 30 மி.லி. அளவு குடிக்க வேண்டும். தினமும், 2 வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.
 
வெள்ளைபடுதல் குணமாக இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவுடன் காய்ச்சாத பசும்பால் ஒரு டம்ளர் கலந்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். காலையில் மட்டும் 10 நாள்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments