புடலங்காயில் உள்ள சத்துக்களும் பயன்களும் !!

Sasikala|
புடலங்காயில் நமது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்து போன்றவை ஏராளமாக  நிறைந்துள்ளது.

புடலங்காயில் நன்கு முற்றிய புடலங்காய் சாப்பிடுவதை தவிர்த்து, பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி அடைந்த புடலங்காயை சமைத்து சாப்பிடுவது மிகவும்  நல்லது.
 
புடலங்காய் குளிர்ச்சி தன்மை நிறைந்த ஒரு காய் வகையாகும். தினமும் இதை சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.
 
தீவிரமான மலச்சிக்கல் பிரச்சனை தீர தினமும் புடலங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சுலபத்தில் நீங்கும்.
 
அளவுக்கதிகமாக உடல் எடை கூடியவர்கள் அதிக எடையை குறைக்க பல வகையான இயற்கை உணவுகளை சாப்பிடுவது அவசியம். உடலில் கொழுப்பு படியாமல் தடுத்து உடல் எடையை சீக்கிரம் குறைப்பதில் புடலங்காய் சிறப்பாக பணியாற்றுகிறது. இதில் இருக்கும் சத்துகள் உடலின் அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தி, நீர் சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது. 
 
தலைமுடி தலைமுடி கொட்டுதல், பித்த நரை அல்லது இளநரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் ஏராளம் இருக்கின்றன.  மேற்சொன்ன பிரச்சனைகள் இருப்பவர்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறையாவது புடலங்காய் உணவுகளை சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த  அத்தனை பிரச்சனைகளும் குணமாகும்.
 
தினமும் ஒரு வேளையாவது புடலங்காய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :