வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மருத்துவ பயன்கள் அதிகம் நிறைந்து காணப்படும் இந்துப்பு !!

சாதாரண உப்பில் இருப்பதை போலவே இந்து உப்பில் சோடியம் குளோரைடு, அயோடின் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், இரும்பு, துத்தநாகம், போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது. 

குளிர்ச்சி தன்மை உடைய இந்த உப்பினை நாம் உபயோகப்படுத்தும் பொழுது நம் பசியை தூண்டுகிறது. எளிதில் செரிமானமாகும் திறன் உள்ளது. மலம் கழிப்பதில் கடினம் இருந்தால் அதனை சரி படுத்துகிறது. மூல வியாதியை போக்க, இந்த உப்பு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. 
 
இமயமலை பகுதிகளில் இந்த இந்துப்பானது மலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இந்து உப்பானது வெள்ளை, சிவப்பு மற்றும் ஊதா நிறங்களில்  காணப்படுகின்றது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த உப்பு பயன்படுத்தப்படுகிறது.
 
நம் வயிற்றில் உள்ள குடல் உணவை நன்றாக உறிஞ்சி சத்துக்களை நம் உடலுக்கு அளிக்கின்றது. இந்து உப்பினை இளஞ்சூடான வெந்நீருடன் கலந்து வாய்  கொப்பளித்து வர வாய் துர்நாற்றம் பல் வலி ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும். நாக்கின் ருசி தன்மையை அதிகப்படுத்தும். 
 
நம் குளிக்கும் நீரில் உப்பைப் போட்டு குளித்து வர நம் உடம்பிற்கு தேவையான இரும்புச் சத்தை தருகிறது. தோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கிறது. தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். 
 
ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது. இதனால் நமக்கு நிம்மதியான உறக்கம் கிடைப்பதுடன் தைராய்டு பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கிறது. உடல்  எடையை குறைக்க உதவுகிறது. 
 
தொண்டை வலி மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கிறது. மூக்கு, காது, ஆஸ்துமா பிரச்சினைகளை கட்டுப்படுத்துகிறது.