1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
  4. Do you know how many nutrients are in Kamala Orange!!

என்னவெல்லாம் சத்துக்கள் நிறைந்துள்ளது கமலா ஆரஞ்சில் தெரியுமா !!

Orange Fruit
ஆரஞ்சு பழத்தில் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றிகளான பீட்டா கரோட்டீன்கள் அதிக அளவில் உள்ளன. இது சூரியக் கதிர்களால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது மற்றும் முதுமை தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.


கமலா ஆரஞ்சில் உள்ள பிலேவனாயுடுகள் அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய மெக்னீசியம் இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவி செய்கிறது.

உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர நன்மை பயக்கும். மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால் கமலா ஆரஞ்சு ஜூஸை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இதில் இருக்கக்கூடிய நோயெதிர்ப்பு அழற்சி பொருள் மூட்டுகளில் இருக்கக்கூடிய வீக்கத்தை குறைத்து மூட்டுகளுக்கு நல்ல பலன் கொடுக்கக் கூடியது.

விந்தணுக்களின் ஆரோக்கித்திற்கு கமலா ஆரஞ்சு மிகவும் நல்லது. கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய ஃபோலேட் என்னும் ஊட்டச் சத்து விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

கண் பார்வை மங்கல் போன்ற கோளாறு உடையவர்கள் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர கண்பார்வைத் தெளிவடையும். கமலா ஆரஞ்சில் விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

அடிக்கடி சளி காய்ச்சல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு காயை சாப்பிட்டு வர பலன் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர அதில் இருக்க கூடிய நார் சத்து குடலியக்கத்தை சீராக்கி மலம் எழுதில் வெளியேற உதவி செய்கிறது.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
சுவையான முறையில் சிக்கன் போண்டா செய்ய !!