1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala
Last Modified: வியாழன், 10 பிப்ரவரி 2022 (17:45 IST)

வயிற்று பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும் சீரக தண்ணீர் !!

பித்தம் காரணமாக உடலில் பல நோய்கள் ஏற்படும். பித்தம் சம்பந்தமான வியாதியினால் கஷ்டப்படுகிறவர்கள் சுலபமாக பித்தத்தை தணிக்க சீரகம் பயன்படுகிறது.


சிலருக்கு விரையில் வாய்வு தங்கி வீக்கம் போல உப்பிசமடைந்து, சிலசமயம் வலி தோன்றுவதும் உண்டு. இதை அப்படியே விட்டுவிட்டால் விரை வீக்கமடைந்து கஷ்டத்தைக் கொடுக்கும். இதை ஆரம்பத்திலேயே கவனித்துக் குணப்படுத்திவிட வேண்டும்.

கருஞ்சீரகம் 30 கிராம், உரித்த வெள்ளைப் பூண்டு பற்கள் 20 கிராம் இவைகளை மைபோல அரைத்து எடுத்து ஒரு வாணலியில் 50 கிராம் தேனை விட்டு, அடுப்பில் வைத்து அது காய்ந்து வரும் சமயம் அதில் அரைத்த மருந்தைப் போட்டுக் கலக்கிக் கிளறி இறக்கி வைத்துவிட வேண்டும்.

ஆறியவுடன் ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு காலை, மாலை இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு வெந்நீர் குடித்துவிட வேண்டும்.

சீரகம் வயிறு மற்றும் செரிமான அமைப்பை வலுப்படுத்த ஒரு நல்ல மூலமாகும். தினமும் உட்கொள்வதால் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லை. பயன்பாட்டு முறை: வயிற்றுப் பிரச்சினையிலிருந்து விடுபட, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியைச் சேர்த்து, கலந்து குடிக்கவும்.

கிராம் ஐந்து சீரகத்தையும், 10 கிராம் வெங்காயத்தையும் ஒன்றாகச் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து, ஆழாக்குப் பசும்பாலில் கலந்து காலையில் மட்டும் குடித்து வரவேண்டும். இந்த விதமாக ஏழுநாள் மட்டும் சாப்பிட்டால் போதும் வெட்டை நோய் குணமாகும்.