திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மலச்சிக்கல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ஆமணுக்கு எண்ணெய் !!

ஆமணுக்கு செடியில் இருந்து தயார் செய்யப்படுவது தான் இந்த விளக்கெண்ணெய். ஆமனுக்கு செடி, மண்ணில் இருக்கும் பல்வேறு சத்துக்களை உறிஞ்சி எடுத்து விடுகிறது. இந்த சத்துக்கள் விளக்கெண்ணெயிலும் நிரம்பி வழிகிறது. 

ஆமணக்கிலிருந்து இரண்டு முறைகளில் எண்ணெய் எடுக்கலாம். ஆமணக்கு விதைகளை எந்திர செக்குகளில் இட்டு, ஆட்டி எண்ணெய் பிழிவது ஒரு வகை. ஆமணக்கு விதைகளை இடித்துத் தண்ணீரில் கொதிக்க வைத்து, எண்ணெய் பெறுவது இன்னொரு முறை. இந்த இரண்டாவது முறை, ‘ஊறின எண்ணெய்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த முறையில்தான் நம் மூதாதையர்கள், எண்ணெய் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர்.
 
பருப்பு வேகவைக்கும்போது அதில், இரண்டு துளி எண்ணெய்யை விட்டால், பருப்பில் உள்ள வாயு நீங்கிவிடும். பிறந்த குழந்தை முதல் கர்ப்பிணி மற்றும் முதியோர் வரை அனைவருக்குமான சிறந்த குளியல் எண்ணெய் இது. அனைத்து தரப்பினருக்குமான மலச்சிக்கலை நீக்குவதற்கு பாதுகாப்பான மருந்து இது. காய்ச்சிய எண்ணெய்யில் 3 முதல் 5 துளிகள் வரை இரவு படுக்கப்போகும் முன் குடித்து வர, மலச்சிக்கல் நீங்கும். சிறு குழந்தைகளுக்கு 2 துளிகள் போதுமானது.
 
இது பக்கவிளைவற்ற பாதுகாப்பான மலமிளக்கி. காய்ச்சிய எண்ணெய்யுடன் கால் பங்கு எடையில் கடுக்காய்பிஞ்சுப் பொடியைச் சேர்த்து நன்கு அரைத்து வாய்வு, மூலக்கடுப்பு, ரத்தமூலம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், படுக்கப்போகும் முன் 5 மில்லி வரை குடித்து வர, அனைத்து மூலப்பிரச்சினைகளும் தீரும். இதற்கு ‘மூலகுடோரி தைலம்‘ என்று பெயர். இது எல்லாச் சித்த மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
 
விளக்கெண்ணெய் பேதியை போக்கும் திறன் கொண்டது. வயிற்றை சுத்தம் செய்யவும், மலம் எளிதில் கழியவும் இந்த விளக்கெண்ணெய் பயன்படுகிறது. விளக்கெண்ணெயை தொப்புளில் வைப்பதன் மூலம் கண் பார்வை தெளிவாகும்.
 
மலச்சிக்கல், வயிற்றுப்புண், வாயுத்தொல்லைப் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு விளக்கெண்ணெய் நல்ல பலனை தரும். குழந்தை பிரசவித்த தாய்மார்களில் சிலருக்கு, பால் அதிகம் சுரப்பதில் பிரச்சனை இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள், மார்பகங்களில் விளக்கெண்ணெயை தேய்த்தால், பால் சுரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
 
விளக்கெண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளிப்பதன் மூலம், உடல் சூடு குறையும். அதுமட்டுமல்லாது, நரம்பு மற்றும் மூட்டு வலிகளுக்கு வலி நிவாரணியாகவும் இது பயன்படுகிறது.