வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

மூங்கில் அரிசியில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

மூங்கில் அரிசி பச்சை நிறம் கொண்டது. இனிப்பு சுவை கொண்ட மூங்கில் அரிசி உறுதியானது மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது.

மூங்கில் அரிசியில் கார்போஹைட்ரேட் அளவு என்பது மிக முக்கியமான சத்தாக உள்ளது. நமது உடலில் தோன்றும் வாத, பித்த, போன்றவைகளை சரி செய்து, உடலில் உள்ள நச்சுக்களையும் இந்த அரிசி நீக்குகிறது.
 
ஒரு கப் அளவுள்ள மூங்கில் அரிசியில் மட்டும் 160 கலோரிகள் நிறைந்துள்ளது. மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரசத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க், போன்ற உடலுக்கு தேவையான கனிமசத்துக்கள் நிறைந்துள்ளது.
 
மூங்கில் அரிசியில் செய்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
 
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை நீக்கும் தன்மை கொண்டது. இது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
 
மூங்கில் அரிசி உணவுகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாகின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பது, கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது, சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவது போன்ற பணிகளையும் மூங்கில் அரிசி செவ்வனே செய்கிறது.
 
கொழுப்பு சத்து எனும்போது மூங்கில் அரிசியில் கொழுப்பு சத்தே இல்லை. அதனால் உணவு கட்டுப்பாடு மேற்கொள்பவர்கள் இந்த அரிசி உணவை உட்கொண்டால் சிறப்புற இருக்கும்.