நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் கேரட் !!
கேரட்டில் உள்ள பைட்டோ கெமிகல்ஸ், ஆண்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதயத்தை பாதுகாக்கிறது.
கேரட்டில் வைட்டமின் சி உடன் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் இரத்தை சுத்தப்படுத்தி இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்பது சருமத்திற்கு உகந்த ஊட்டச்சத்து ஆகும், இது உடலுக்குள் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இது தோல் திசுக்களை சரிசெய்ய உதவுகிறது.
நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் கேரட்டில் நிறைந்து காணப்படுகிறது. உடலில் அதிக அளவு கொழுப்பு கொண்டவர்கள் கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
வேக வைத்த கேரட்டை சாப்பிடுவதை விட அதனை பச்சையாக கடித்து சாப்பிடுவது நம் உடலுக்கு பன்மடங்கு நன்மை பயக்கும்.
இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க தொடர்ந்து மூன்று வாரம், தினமும் ஒரு கப் அளவு கேரட் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.