Daily Horoscope
✕

வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு நக சுத்தியை எளிதில் குணப்படுத்தும் வழிகள்...!

Updated: திங்கள், 7 ஜனவரி 2019 (14:22 IST)
 
மிக எளிதாக கிடைக்கக் கூடிய கற்றாழைக்கு நக சுத்தியை ஆற்றும் சக்தி உள்ளது. கற்றாழை சாறுடன் மஞ்சள் தூள் அரைத்து,  விளக்கெண்ணைய் விட்டு சூட வைத்து, அதை நகத்தில் பூசினால் நகசுத்தி குணமாகும்
 
அதை விட எளிமையான சிகிச்சை ஒன்று உள்ளது. அது தான் வினிகர். ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது வெள்ளை வினிகரை நீரில் கலந்து,  அந்த நீரில் விரலை 30 நிமிடங்களுக்கு வைக்க வேண்டும். இப்படி தினமும் 3 வேளை வைத்து, வைட்டமின் ஈ எண்ணெயை தேய்த்தால்  உடனடி தீர்வு கிடைக்கும்
 
உப்பு நீரில் பாதிக்கப்பட்ட விரலை வைத்தாலும், நக சுத்தி சரியாகும். சாதாரண கல் உப்பை கரைத்து அந்த நீரையே இதற்கு பயன்படுத்தலாம்.  கடல் நீரில் கால் நனைத்தாலும் நக சுத்தி சரியாகும். பின்னர். காலைத் துடைத்து விட்டு அந்த இடத்தில் வினிகரை தடவ வேண்டும்.
 
சோடா உப்பு பசையை நக சுத்தி வந்த இடத்தில் தடவினால், அதில் உள்ள அலகலைன் பூஞ்சைகளை வளரவிடாமல் தடுத்து நக சுத்தியை  குணமாக்குகிறது.
 
எலுமிச்சை பழத்தை இரு துண்டாக வெட்டி நகத்தை புகுத்தினாலும் நக சுத்தி வராது. மருத்துவ ரீதியாக இது நிரூபணம் ஆகவில்லை என்றாலும், அனுபவத்திற்கு நிரூபணமாகியுள்ளது. இதுவும் பலன் தரும் என்றாலும் கூட அதை விட சிறந்தது என்னவென்றால், மருதாணி  பவுடர் தான்.
 
மஞ்சளை விட மருத்துவம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நக சுத்திற்கு எளிமையான ஒரு மருத்துவம் என்னவென்றால், நீரில் மஞ்சள் எண்ணெயை கரைத்து, நகத்தில் தடவினால் போதும்.
 
இதே போல் வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்திலும், விரலை சுற்றிலும் தேய்த்து வர, நக சுத்தி விரைவில் குணமாகும்.

எல்லாம் காட்டு

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?!.. பொதுமக்கள் அலார்ட்!..

நள்ளிரவு உணவால் வரும் ஆபத்து!.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments