தினம் ஒரு வாழை சாப்பிட்டு பாருங்க தெரியும்...!
ஆண்டு முழுவதும் சீசன் உள்ள வாழைப்பழத்திற்கு, நமது நாட்டில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் கடும் கிராக்கி உள்ளது. வாழைப்பழம் கிடைக்காத சில நாடுகள் கூட பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து பயன்படுத்துகிறார்கள்.
ஒரு வாழைப்பழத்தில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அத்துடன் நார்ச்சத்து 16 சதவிகிதம், வைட்டமின் சி 15 சதவிகிதம் மற்றும் பொட்டாசியம் 11 சதவிகிதம் உள்ளது. வாழைப்பழத்தில் நமது உடல் தானே தயாரிக்க இயலாத எட்டு வகையான அமினோ அமிலங்கள் இருக்கிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவும், உப்பு குறைந்த அளவும் இருப்பதால் அது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. இரும்புச்சத்து போதுமான அளவில் இருப்பதால் இரத்தசோகை இருப்பவர்களுக்கு வாழைப்பழம் சிறந்தது.
தோலின் உட்புறத்தை, நமது சருமத்தின் மீது தேய்த்தால் கொசு நம்மை அண்டுவதில்லை. வாழைப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், அளவுக்கு அதிகமாக மது குடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன.
நினைவு ஆற்றலை தக்கவைத்துக் கொள்வதில் வாழைப்பபழம பெரும்பங்கு வகிக்கிறது. வாழைப்பழத்தில் உள்ள பி6 மற்றும் பி12 வைட்டமின்கள், புகைபிடிக்கும் பழக்கத்தையும் கைவிட உதவும்.
கடுமையான வயிற்றுப் போக்கை தடுப்பதற்கும், மலச்சிக்கலைப் போக்கவும் வாழை அருமருந்தாகத் திகழ்கிறது. வயிற்றில் அமிலம் சுரப்பதையும், அல்சர் எனப்படும் புண் ஏற்படுவதையும் வாழை தடுக்கிறது.
வாழைப்பழம் தின்றால் சளி பிடித்துக் கொள்கிறது என்று கூறி தவிர்த்துவிடுகிறோம். உண்மையில், பழம் சளியைத் தருவதில்லை, முன்பே உடலில் தேங்கியிருக்கும் சளியை வெளியே கொண்டுவரும் வேலையைத்தான் பழம் செய்கிறது.
ஆய்வு ஒன்றில் ‘வாழைப்பழத்தை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்பை, 40 சதவிகிதம் குறைக்க முடிகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.