1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

மருத்துவகுணம் கொண்ட முசுமுசுக்கை இலையின் நன்மைகள்...!

முசுமுசுக்கைக் கீரை உடலில் உள்ள சளியை அறுத்து வெளித்தள்ளுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முசுமுசுக்கைக் கீரையை அரைத்து தோசை மாவுடன் கலந்து தோசை செய்தும் சாப்பிடலாம். இதனால் காய்ச்சல், சளியுடன் கூடிய காய்ச்சல் நாக்குச் சுவையின்மை ஆகியவை  தீரும்.
முசுமுசுக்கைக் கீரை உடலுக்கு கொஞ்சம் உஷ்ணத்தை உண்டு பண்ணும். மேலும் சீதளத்தினால் ஏற்படும் ஜலதோஷத்தை நீக்கவல்லது. இதைத் தவிர இருமல், கபம், சளி மற்று சளி, இருமல் சேர்ந்த எல்லாத் தொல்லைகளையும் போக்கும்.
 
முசுமுசுக்கைக் கீரை சளி மற்றும் இருமல் சம்பந்தமான எல்லாத் பிரச்சனைகளையும் போக்க வல்லது. முசுமுசுக்கை நிலம் படிந்த அல்லது  ஏறி வளரும் சிறுகொடி. தாவரம் முழுவதும் சொர சொரப்பான சுணைகள் கொண்டது. இலைகள் வெளிர் பச்சை நிறமானவை. 
 
தமிழகமெங்கும் வேலிகள், புதர்களில் பெருமரங்களைச் சுற்றி வளர்கின்றது. இலை, வேர் ஆகியவை மருத்துவப் பயன் மிக்கவை. இரைப்பிருமல் குணமாக இலையை நிழலில் காயவைத்து தூள் செய்து வைத்துக் கொண்டு 120 கிராம் அளவு தூதுவேளை இலைத் தூள் 80  கிராம் அளவுடன் ஒன்றாக கலந்து பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். இதில் ½ தேக்கரண்டி அளவு வெண்ணெயில் கலந்து சாப்பிட வேண்டும்.
 
காசநோயால் அவதியுறுவோருக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வர நோய் குணமாகும். இந்தக் கீரை மட்டுமன்றி இதன் கிழங்கைக் கூட மருத்துவத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதுவும் காச மற்று சுவாச சம்பந்தப்பட்ட நோய்களை நிவர்த்தி செய்யக்  கூடியது.
 
முசுமுசுக்கைக் கீரையை இடித்து சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தலைக்கு எண்ணெய்யாகவும், தலை குளிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இது சுவாச சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளது.
 
கண் எரிச்சல், உடல் எரிச்சல் குணமாக இலைச்சாற்றுடன் சம அளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வாரம் இரு முறை தலை முழுக  வேண்டும். வாந்தி குணமாக வேரை உலர்த்தி தூள் செய்து கொண்டு, ½ தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் நீரில் இட்டு ½ டம்ளராக சுண்டக்  காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
 
முசுமுசுக்கை துவையல்: 3 பிடி இலைகளை நெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி துவையலாக்கி, தாளித்து சாப்பிட்டு வர வேண்டும். இரைப்பிருமல், மூக்குப் புண் போன்றவை குணமாகும். இரத்தமும் சுத்தமாகும்.