வியாழன், 14 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த கீழாநெல்லியின் பயன்கள்!!

கீழாநெல்லி சாலையோரங்களில் எளிதாக கிடைக்க கூடியது. பல்வேறு நன்மைகளை கொண்ட நில நெல்லி மஞ்சள் காமாலை மற்றும் தோல்  நோய்களுக்கு மருந்தாகிறது. 
இவற்றை நில நெல்லி என்றும் கூறுவர். இதில் இலைகளுக்கு சற்று இடைவெளியில் காய்கள் இருக்கும். நில நெல்லி தோல்நோய்  மருந்தாகிறது. உள் மருந்தாக சாப்பிடுவதால் விட்டுவிட்டு வரும் வயிற்று வலி, சிறுநீர் தாரையில் ஏற்படும் வலி, மாதவிலக்கு சமயத்தில்  ஏற்படும் வலி, வெள்ளைப்போக்கு ஆகியவை குணமாகும்.
 
விரை வீக்கத்தை குறைக்க கூடிய தன்மை கொண்டது. காய்ச்சலை தணிக்கவல்லது. பசியை தூண்டக் கூடியது. வயிற்று புண்களை ஆற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்த கூடியது. 
 
சீத பேதியை தணிக்க கூடியது. நில நெல்லியின் இலை முதல் வேர் வரை மருந்தாக பயன்படுகிறது. நில நெல்லியை பயன்படுத்தி வெள்ளைப்படுதல், அடிவயிற்றில் ஏற்படும் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.
ஒருபிடி நிலநெல்லி இலை மற்றும் காய்கள் எடுத்து இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி உணவுக்கு முன்பு 100 மிலி வரை குடித்துவர மஞ்சள் காமாலை குணமாகும். 
 
பித்தத்தை சமன்படுத்தும். சிறுநீர் பெருக்கியாகவும் விளங்குகிறது. நிலநெல்லி இலை பசையுடன் உப்பு சேர்த்து கலந்து சிரங்கு இருக்கும் இடத்தில் தடவினால் சிரங்கு குணமாகும். நில நெல்லியானது தேமல், சொரி, சிரங்கு போன்றவற்றுக்கு மருந்தாகிறது.
 
நில நெல்லி இலையை பயன்படுத்தி புண்கள், பூச்சிக்கடிக்கான மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். இலை பசையுடன் நல்லெண்ணெய் சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இந்த தைலம் புண்கள், பூச்சிக்கடியை குணப்படுத்தும்.
 
வேர் பகுதியை தேனீராக்கி குடிப்பதால் பேதி சரியாகிறது. தலைக்கு தேய்த்து குளிப்பதனால் பொடுகு இல்லாமல் போகும்.