புதன், 25 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By Sasikala

அன்றாட உணவில் பழங்களை சேர்ப்பதால் கிடைக்கும் பயன்கள் !!

இளம் வயதினில் அதிகம் பேர் போதுமான சத்து இல்லாமல் ரத்த சோகையுடன் இருக்கின்றனர், இவர்கள் 3 பேரீச்சை பழங்களையாவது இளஞ்சுட்டில் உள்ள பாலுடன் உண்டு வந்தால், ரத்தம் பெருக்கும் உடல் அசதியும் நீங்கும். 

அத்தி பழமும் கூட இரத்த சோகையை போக்க வல்லது, மேலும் அத்தி பழம் கருப்பை தொடர்பான பிரச்சினைகளையும் குணப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அத்திபழத்தை ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு பயன் அடையலாம்.
 
வாழைப்பழம், நாவல் இதை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு நீரிழிவு சற்று தள்ளியே நிற்கும் எனலாம். நாவல் கண் எரிச்சலை சரிசெய்யும் உடல் சூட்டின் காரணமாக உண்டாகும் வயிற்று போக்கை குணப்படுத்தும்.
 
பப்பாளிக்கும் வயிற்று பூச்சிகளை கொல்லும் இதை உணவிற்கு முன் சாப்பிடலாம். செவ்வாழை பழத்தையும் உணவிற்கு முன் சாப்பிடலாம் தோல் வியாதிகள், வெடிப்புகள் இதன் மூலம் குணமாகும்.
 
வைட்டமின் சி சத்து உடைய கொய்யா எலும்புகளுக்கு பலத்தையும் உறுதியையும் தரும். நீரிழிவு நோயாளியும் சாப்பிடலாம். மலச்சிக்களுக்கு சரியான மருந்து,  வைட்டமின் பி சத்து அதிகம் உள்ள அன்னாசியும் ஜீரணக் கோளாறுகளுக்கு சரியான தீர்வை தரும், மேலும் இரத்த சோகை மஞ்சள் காமாலை, கண் தொடர்பான  நோய்கள் வராமல் தடுக்கவும் உதவும்.
 
கருப்பு திராட்சை சாறு பெண்களின் மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்ய கூடியது. உலர்ந்த திராட்சையை தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்பும் உறுதிபெறும், இதயமும் பலம் பெறும். இனிப்பு உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
 
எலும்பு வலுவடையவும் தோல் மெருகு கூடவும் உதவும் அற்புதமான பழம் மாம்பழம். ஆரஞ்சு பழம் உண்டு வந்தால் நாம் வாய் துர்நாற்றம், ஈறுவிக்கம், பல்வலி போன்றவை நீங்கும்.