செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்க உதவும் அழகு குறிப்புகள் !!

சருமத்தில் இருக்கும் சோர்வு நீங்கி, முகம் பொலிவோடு இருக்க வாரத்திற்கு 2 முறை ஃபேஸ் மாஸ்க் போடவேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் போட வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யலாம்.

உடல் சோர்வானது முதலில் உடலில் வெளிப்படுவதை விட, முகத்தில் தான் முதலில் வெளிப்படும். அதுவும் சரும சுருக்கங்கள், கருவளையங்கள், கரும்புள்ளிகள் என்று பலவற்றின் மூலம் வெளிப்படும். 
 
எப்போதும் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள முயல வேண்டும். அதற்கு ஒருசில செயல்களை செய்தாலேயே முகத்தின் பொலிவை அதிகரிக்கலாம். இப்போது முகத்தின் சோர்வை நீக்கி, அதன் பொலிவை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம். 
 
முகத்தை கழுவுவதால், சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அழுக்குகள் மற்றும் மாசுக்களை மட்டும் நீங்குவதில்லை, சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கவும் உதவியாக இருக்கும். அதற்கு ஒரு நாளைக்கு 4 முறையாவது முகத்தை கழுவுங்கள். 
 
வாரத்திற்கு ஒரு முறை தவறாமல் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் தங்கியுள்ள இறந்த செல்களை வெளியேற்றி, சருமம் பொலிவோடு காணப்படும்.  அதற்கு 2 டேபிள் ஸ்பூன் உப்பில், பாதி எலுமிச்சையை பிழிந்து, சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, பின் அதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து, 2-3 நிமிடம்  ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். 
 
கண்களைச் சுற்றியுள்ள சோர்வு மற்றும் கருவளையத்தைப் போக்க, தினமும் உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரிக்காய் துண்டை கண்களில் 10 நிமிடம் வைத்து  வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.