Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் பீட்ரூட்.....!

Updated: வியாழன், 24 மே 2018 (18:29 IST)
 
ஆண்கள் தொடர்ந்து பீட்ரூட் சாப்பிட்டு வருவதன் மூலம், உடல் முழுவதும், குறிப்பாக பிறப்புறுப்புகளில் உள்ள இரத்த நாளங்கள் விரிந்து, இரத்த ஓட்டம்  அதிகரித்து, பாலியல் பிரச்சனைகள் நீங்கி, படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட உதவும்.
தினமும் 500 கிராம் பீட்ரூட் சாப்பிட்டால், ஆறு மணிநேரத்திற்குள் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பீட்ரூட்டை  நன்கு சுத்தமாக நீரில் கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். அதனை துண்டுகளாக்கி, வேக வைத்து, பின் அதில்  சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து உட்கொண்டு வர, உடலில் நைட்ரேட்டுகளின் அளவு அதிகரிப்பதோடு, இரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்.
 
பீட்ரூட்டை ஜூஸ் செய்து குடிக்கும் போது, அதில் சர்க்கரை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. பீட்-ருட் ஜூஸ் செய்வதற்கு 2 சிறிய பீட்ரூட்டை எடுத்து,  நன்கு கழுவி, தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி அப்படியே குடிக்க வேண்டும்.

எல்லாம் காட்டு

உடல் உறுப்பை பாதிக்கும் 7 கெட்ட பழக்கங்கள்!.. உடனே நிறுத்துங்க!...

உடல் எடை குறையாமல் இருக்க காரணம் என்ன?.. வாங்க பார்ப்போம்!..

மீண்டும் சூடுபடுத்தக் கூடாத உணவுகள்!.. வாங்க பார்ப்போம்..

சாப்பிட்டா நோயே வராது!.. சிறு தானியங்களின் பெரு நன்மைகள்!..

உணவு சாப்பிட்டவுடன் என்னவெல்லாம் செய்யக்கூடாது!.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்