திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. இய‌ற்கை வைத்தியம்
Written By

அடிவயிற்றில் தேங்கும் கொழுப்பை விரட்டும் அற்புத வழிகள்....!

சரியான முறையில் சாப்பிட்டால் 80% கொழுப்பை நிச்சயம் குறைக்க முடியும். அவ்வப்போது இடை உணவுகள், துரித உணவுகள் ஆகிய கடைகளில் வாங்கும்  உணவுகளை அறவே தவிர்த்தால் தடியான வயிறை தட்டையான வயிறாக மாற்ற முடியும்.
பெரும்பாலானோர் தாகம், அயர்ச்சி, பசி ஆகியவற்றைப் பற்றி தெளிவாக உணராத சிலர் பசிக்கும் போது நிறைய சர்க்கரை கொண்ட உணவை உண்டு எடையை தங்களை அறியாமலேயே அதிகப்படுத்திக் கொள்கின்றனர்.
 
பல மணி நேரம் உழைப்பு மற்றும் வெகுதூர ஓட்டப் பயிற்சி ஆகிய இரண்டும் தரும் பலன்களை விட, சிறிது நேரம் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்பு அதிகமாக குறையும். நாம் உண்ணும் உணவில் சாக்கரையை குறைப்பது நல்லது. இதற்கு பதிலாக தேன், பனங்கற்கண்டு மற்றும் அதிமதுர சாறு  ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
 
உடலில் உள்ள கொழுப்புகளை சக்தியாக மாற்றும் கார்னிடைன் என்ற பொருளை சுரப்பதற்கு உதவும் வைட்டமின் சி மிகவும் அவசியமானதாக உள்ளது.இந்த  கார்டிசால் தான் வயிற்று கொழுப்பு அதிகரிப்பதற்கு மிக முக்கிய காரணமாகும்.
 
கொழுப்பை குறைப்பதற்கு இயற்கையான வழிகள் பலவும் உள்ளன. பூண்டு, வெங்காயம், இஞ்சி, சிவப்பு மிளகு, கோஸ், தக்காளி, மற்றும் இலவங்கப்பட்டை, கடுகு, கிராம்பு ஆகியவையும் கொழுப்பை கரைக்க உதவுகின்றன. சிறிது கிராம்பு, பச்சை பூண்டு மற்றும் ஒரு அங்குல அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை கலந்து  தினமும் காலை சாப்பிட்டு வந்தால் கொழுப்பை நிச்சயம் கரைக்க முடியும். 
வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து, காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதும் மிகப் பிரபலமான உடல் எடையை குறைக்கும் வழியாக பின்பற்றப்படுகின்றது. இது போன்று பல வழிகள் உண்டு.
 
காலை உணவை தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நிறைய மக்கள் தவறாக நினைப்பதுண்டு. இது உடல் எடையை குறைக்காமல், உடல் வீக்கமடைய காரணமாகிவிடுகிறது. இதனால் வயிறு உப்புசமடைவது அதிகரித்து, பசி அதிகமாவதால் வயிற்றுக் கொழுப்பு மிகவும் அதிகமாகிறது.