ஆண்கள் திருமணம் செய்ய தகுந்த வயது எது தெரியுமா....?
பெண்கள் கருத்தரிக்க ஏற்ற சரியான வயது என தீர்மாணிக்கும் அதே நேரத்தில், ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். வயதான பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் வயதாகும் போது கருவுறுதல் திறன் குறைகிறது.
ஒரு ஆராய்ச்சியில் 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் கால தாமதமாக தான் கருவுறுகிறார்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் 25 வயதுள்ள ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் எளிதில் கர்ப்பமடைந்துவிடுகிறார்களாம்.
ஆண்கள் 30 வயதிற்கு மேல் வரும் ஒவ்வொரு ஆண்டும் தங்களது கருவுறும் திறனை 1% இழக்கிறார்கள் என பார்த்திருந்தோம். அதுமட்டுமின்றி ஆண்களின் 35-ஆவது வயதில் அவர்களின் டி.என்.ஏக்கள் பாதிப்படைய தொடங்குகிறது.
ஆணின் 15 முதல் 19 வயதில் தான் விந்தணுக்களின் வளர்ச்சி ஆரம்பிக்கும். எனவே இந்த வயது ஒரு ஆண் குழந்தை பெற நிச்சயம் சிறந்த வயதாக இருக்க முடியாது. விந்தணுக்களின் இயக்கம் விந்தணுக்களின் தரம், மற்றும் இயக்கம் 25 வயதிற்கு முன்னால் மிகச்சிறப்பாக இருக்கும். இதன் தரம் மற்றும் இயக்கம் 55 வயதிற்கு பின்னர் மிகக்குறைவாகிவிடும். இந்த நேரத்தில் ஆண் தனது கருவுறுதல் திறனை 50% வரை இழக்கக்கூடும்.
வாழ்க்கை முறை ஆண் கருவுறுதல் வயதை பொருத்து அமைந்தாலும், அது வாழ்க்கை முறையை பொருத்தும் அமையும். புகைப்பிடித்தல், ஊட்டச்சத்தின்மை, இறுக்கமான உடைகளை அணிவது, தூக்கமின்மை போன்ற சில பிரச்சனைகளும் ஆண்கள் கருவுறாமைக்கு காரணமாக அமைகிறது.