திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 16 ஆகஸ்ட் 2023 (13:57 IST)

இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த முதல்வரின் சகோதரி

YSR sharmila
ஆந்திர மாநிலத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இவரது சகோதரி ஒய்.எஸ்.ஆர். சர்மிளான். இவர், ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற அரசியல் அமைப்பை நடத்தி வருகிறார். இந்த  நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி இவர், ஐதராபாத், செவெல்லாவில் இருந்து பாதயாத்திரையை தொடங்கினார்.

அபோது, சட்டமன்ற தொகுதி வாரியாக  நடைப்பயணம் மேற்கொண்ட போது, அவர் போலீஸாரால் 2முறை கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ஒன்றரை  ஆண்டுகால  பாத யாத்திரை பயணத்தில் அவர் 3,800 கிமீ பயணித்துள்ளாதாக தகவல் வெளியானது.

எனவே, ஒய்.எஸ்.ஆர். சர்மிளாவின் இந்தச் சாதனையை அங்கீகரிக்கும் வகையில், இந்திய சாதனைப் புத்தகத்தில் அவர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருக்கு ஒய்.ஆர்.ஆர். காங்கிரஸ் கட்சியினர், ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சியினர், அரசியல் தலைவர்கள் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.