கண்களை மூடினாலே அடித்து உதைத்தனர்…சீனா அத்துமீறலை கூறிய இளைஞர்கள்!
இந்திய - சீன எல்லைப் பகுதியான அருணாச்சல பிரதேசத்தில் சீனா ராணுவத்தினரால் இளைஞர்கள் கடத்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
சமீபத்தில் 5 இளைஞர்கள் கடத்தப்பட்ட நிலையில் அவர்களை மீண்டும் ஒப்படைத்தது சீனா.
இந்நிலையில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி கடத்தப்பட்ட ஒரு இளைஞனை சீனா ராணுவத்தினர் பல வகையில் கொடுமை செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களை இளைஞர் சீனாவுக்காக உளவு பார்த்ததாககூறி கைகளைக் கட்டிவைத்து, 15 நாட்களை கண்களை மூட விடாமலும் கண்களைன் மூடினால் அடித்தும் டார்ச்சர் செய்து, மின்சாரா ஷாக் கொடுத்து சித்ரவதை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தினரின் உதவியால் பாதிக்கப்பட்ட இளைஞர் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.