ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 25 மே 2019 (15:16 IST)

இன்னும் பதவியே ஏற்கலை! அதுக்குள்ளே ஆட்டம் ஆரம்பமா?

மக்களவை தேர்தல் முடிந்து இன்னும் புதிய அரசு பதவியேற்ககூட இல்லை. அதற்குள் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக நான்கு பேர் பசு பாதுகாப்பாளர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  இந்த வீடியோவில் சில இளைஞர்கள் மாட்டிறைச்சி வைத்துள்ளதாக அவர்களை நான்கு பேரை அடித்து உதைப்பது போன்ற காட்சிகள் உள்ளன. அடிவாங்கிய நால்வரில் ஒருவர் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலை அந்த பகுதியில் இருந்தவர்கள் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர் என்பது கொடுமையிலும் கொடுமையான ஒருவிஷயம்
 
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருவதாகவும் இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தில், கமல்நாத் தலைமையில், காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று கொண்டிருந்தாலும் அங்கு பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் ஒருசிலர் கடந்த சில ஆண்டுகளாகவே அட்டகாசம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது